×
Saravana Stores

பச்சை மிளகாய் தொக்கு

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – 15
சின்ன வெங்காயம் – 10-12
இஞ்சி – 2 இன்ச் அளவு
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் – ½ டீ ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ டீ ஸ்பூன்
வெந்தயம் – ¼ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ¼ டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு

செய்முறை:

பச்சை மிளகாயை நன்றாக கழுவி காம்புகளை நீக்கி நன்றாக உலர விடவும்.பின் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் எண்ணெய்யில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வறுக்கவும். பின் அதனுடன் கீரி வைத்த பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.அதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.அதனுடன் கருவேப்பிலை சேர்த்து சத்தம் அடங்கும் வரை விடவும்.பின் அதில் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறவும்.பின் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கலந்து விடவும்.தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் இல்லை என்றால் நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது கார சாரமான பச்சை மிளகாய் குழம்பு ரெடி!

 

The post பச்சை மிளகாய் தொக்கு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சரும வறட்சியைப் போக்கும் மஞ்சள்கிழங்கு!