×

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்..!!

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு, எத்தனை தொகுதிகள் என்பதும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்று விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட வாய்ப்பிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அதன் பொது அலுவலகத்துக்கும் பெயர் சூட்டப்படுகிறது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெங்களூரு வந்தடைந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரத்பவார் பெங்களூரு வருகை தந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் அணி, பா.ஜ.க. நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.

The post எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்..!! appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Sarathbhawar ,Bengaluru ,Bangalore ,Dinakaran ,
× RELATED சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த வேண்டும்: சரத்பவார் பேச்சு