×

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியயுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில் பாஜகவை எதிர்த்து தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் மழை பெய்துவருவதால் பெங்களூருவில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

The post எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Delhi ,BJP ,2024 parliamentary elections ,Chief Minister ,Nitish Kumar ,Patna ,Dinakaran ,
× RELATED தேர்தல் வெற்றி கொண்டாட்டம்...