×

ஊட்டி அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள அறைஹட்டி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் காய்கறி, வாழை மரங்களை சேதப்படுத்தி அங்கேயே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன பகுதிகளில் காட்டு யானைகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவை குடியிருப்பு பகுதிகளில் புகுவதுடன், விவசாய நிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. மேலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள அறைஹட்டி கிராமத்திற்குள் 2 குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று நேற்று மாலை புகுந்தது. இவை அங்குள்ள குடியிருப்புகளின் அருகே வந்து விவசாய நிலங்களில் இருந்த காய்கறிகள், வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் யானைகள் குடியிருப்புகள் அருகே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர். கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post ஊட்டி அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Chamkhatti ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்