×

92வது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இளைஞர்கள், மாணவர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவம் அவரது திருவுருபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அப்துல் கலாமின் சிலைக்கு, தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில நிர்வாகிகள் சிவகங்கை தங்கபாண்டியன், இ.சி.ஆர்.அன்சாரி, நசீரா பானு, காட்டூர் ஆர்.தென்னரசு, துரைப்பாக்கம் ஆ.செல்வகுமார், லலித் குமார், அடையார் அழகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அப்துல் கலாம் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் அளித்த பேட்டியில், ‘‘முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் அப்துல் கலாமுக்கு முழு உருவ சிலை அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அக்டோபர் 15ம் தேதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை மத்திய அரசு தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

The post 92வது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Abdul Kalam ,Chennai ,President ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...