×

பொழுது விடிஞ்சு பொழுதுபோனா இதே வேலைதான் ஆன்லைனில் ரூ.42 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்த மும்பைகாரர்

மும்பை: மும்பையை சேர்ந்த ஒருவர், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.42.3 லட்சத்துக்கு ஆன்லைன் நிறுவனம் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.வீட்டில் சமைக்க வேண்டாம்… ஓட்டலுக்கும் போக வேண்டாம்… இப்படித்தான் இன்றைய வாழ்க்கை பலருக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. பேசு்சுலர்கள் மட்டுமல்ல, வீடுகளில் கூட மாதத்தில் ஒரு சில நாட்களாவது, விரும்பிய ஓட்டலில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.இந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான உணவு டெலிவரி குறித்த விவரங்களை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் மும்பையை சேர்ந்த ஒருவர் தனது ஆப் மூலம் ஓட்டல்களில் ரூ.42.3 லட்சத்துக்கு ஆர்டர் செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளது. கம்பெனி சார்பில் அல்ல… தனி நபர் செய்த உணவு ஆர்டர் இது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோல் உத்தரபிரதேசத்திலுள்ள ஜான்சியை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 269 உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதுபோல், புவனேஸ்வரை சேர்ந்த ஒருவர் 207 பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார்.  பிரியாணிதான் கிங்: ஸ்விகியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆர்டரில் முதலிடம் பிடித்துள்ளது பிரியாணிதான்.

இந்த ஆண்டில் ஒரு நொடிக்கு இரண்டரை பிரியாணி வீதம் ஆர்டர் வந்துள்ளதாம். அதிலும், ஐதராபாத்தைச் சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் கடந்த ஓராண்டில் 1,633 ஐதராபாத் பிரியாணிகள் ஆர்டர் செய்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது சண்டிகாரை சேர்ந்த ஒரு குடும்பம் 70 பிளேட் பிரியாணி ஆர்டர் செய்துள்ளது. பிரியாணி வகையில் சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூருவை பொறுத்தவரை காதலர் தினத்தன்று ஒரு நிமிடத்துக்கு 271 கேக்குகள் வீதம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 லட்சம் கேக்குகள் வாங்கப்பட்டுள்ளன என ஸ்விகி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பொழுது விடிஞ்சு பொழுதுபோனா இதே வேலைதான் ஆன்லைனில் ரூ.42 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்த மும்பைகாரர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED பயணிகள் பலி எண்ணிக்கை தினமும்...