×

போதையில் கார் ஓட்டியதால் ஒருவர் பலி டிரைவருக்கு 7 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : மது போதையில் இருந்தபோது காரை ஓட்டி நடைபாதையின் மீது நின்றிருந்தவர் உயிரிழப்புக்கு காரணமான வழக்கில் காரை ஓட்டி வந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வடபழனி 100 அடி சாலையில் கடந்த 2014ம் ஆண்டு, மது போதையில் காரை ஓட்டிவந்த அஜய்குமார், நடைபாதையில் நின்றிருந்த முத்துக்குமரப்பன் என்பவர் மீது மோதினார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கட்டுப்பாடின்றி சென்ற கார் சாலையில் நின்றுகொண்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் மீதும் மோதியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜய்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார். விசாரணையின்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஓட்டல் வைத்திருக்கும் நபர், கார் மோதியதில் பாதிப்பு ஏற்பட்ட கார் உரிமையாளர் உள்ளிட்டோர் ேநரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டதால் அஜய்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post போதையில் கார் ஓட்டியதால் ஒருவர் பலி டிரைவருக்கு 7 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Additional Sessions Court ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...