×

கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் வெள்ளத்தால் மாயமான மயானம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க தடுப்புச்சுவர் மற்றும் தடுப்பணை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள சொரக்காய்பேட்டையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் கிரமத்திற்கு சொந்தமான மயானம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழைக்கு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் கரைப்பகுதி மற்றும் மயான சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டு சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் மயானத்திற்கு சடலங்கள் எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மயானம் சீரமைக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களின் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் மயானத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

கரையோர கிராம மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கரைப்பகுதியில் மயானத்தை சுற்றி சுமார் 165 மிட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய குழு துணை தலைவர் பொன்.சு. பாரதி கூறுகையில், கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயானம் மற்றும் சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது மீண்டும் சுமார் 165 மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பணை கட்ட ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

The post கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் வெள்ளத்தால் மாயமான மயானம் appeared first on Dinakaran.

Tags : Kosasthalai river ,Pallipatu ,
× RELATED கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80...