×

ஆம்லெட் ரைஸ்

தேவையான பொருட்கள் : .

பிரியாணி அரிசி – 250 கிராம்
வெண்ணெய் அல்லது நெய் – ஒரு மேசைக்கரண்டி
வெங்காய தாள் – 50 கிராம்
கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
குடைமிளகாய் – 2
கோஸ் – 50 கிராம்
உப்பு – சிறிதளவு
கேரட் – 50 கிராம்

செய்முறை :

முட்டையை அடித்து மிளகுத் தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் இந்த கலவையில் ஊற்றவும். பின்னர் இருபுறமும் முட்டை தோசை பொன்னிறமாக வெந்த பின் எடுத்து விரல் நீள அகலத்தில் நாடாகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு கேரட் கோஸ் விதை நீக்கிய குடை மிளகாய் ஆகியவற்றை மூட்டை நாட்களைப் போலவே மெலிதாக வெட்டிக் கொள்ளவும். இதனோடு வெங்காயத்தாள், கொத்த மல்லியை பொடிப், பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் போட்டு கேரட் கோஸ் குடை மிளகாய் போன்றவற்றை போட்டு நன்கு புரட்டி வதக்கி விடவும். அதன் பின்னர் நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் . வேகவைத்த அரிசி சாதத்தை ஆகியவற்றுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு வதக்கி அதில் முட்டை ஆம்லெட் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட பரிமாறினார்கள் விரும்பி உண்பார்கள்.

The post ஆம்லெட் ரைஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!