×

ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி!

புனே: ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. நேற்று புனேவில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.

1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அதன் பின்னர் 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியிருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளை பெற்று புல்லிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இலங்கை அணியில் சங்ககாரா, ஜெயவர்த்தனே, தில்சான், முரளிதரன், மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் அணியிலிருந்து விலகிய பிறகு அந்த அணியால் பெரிய தொடர்களில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. இதற்கு முன் 42 தோல்விகளை பெற்று ஜிம்பாப்வே அணி முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது, இலங்கை அணி 43 தோல்விகளை பெற்று முதலிடத்திற்கு சென்றுள்ளது.

3வது இடத்தில் 38 தோல்விகளுடன் இங்கிலாந்து அணியும், 4வது இடத்தில் 37 தோல்விகளுடன் நியூசிலாந்து அணியும், 5வது இடத்தில் 36 தோல்விகளுடன் பாகிஸ்தான்(85 போட்டிகள்) அணியும், 6வது இடத்தில் 36 தோல்விகளுடன் வெஸ்ட் இண்டீஸ்(81 போட்டிகள்) அணியும், 7வது இடத்தில் 30 தோல்விகளுடன் வங்கதேச அணியும், 8வது இடத்தில் 29 தோல்விகளுடன் இந்திய அணியும், 9வது இடத்தில் 26 தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணியும், 10வது இடத்தில் 24 தோல்விகளுடன் தென் ஆப்பிரிக்க அணியும் உள்ளன.

The post ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி! appeared first on Dinakaran.

Tags : ODI World Cup ,Pune ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே...