×

2வது ஒருநாள் போட்டி: 48 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

நாட்டிங்காம்: இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது ஒரு நாள் போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் ஸ்மித் 88 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர் என 94 ரன், சாம் ஹெயின் 82 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 89 ரன், பென் டக்கட் 48 ரன் எடுததனர்.

50 ஓவர்களில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து அணியில், ஹாரி டெக்டர் 39 ரன், ஜார்ஜ் டக்ரோல் 43 ரன், பேரி மெக்கார்தி 41, கிரேஜ் யங் நாட்அவுட்டாக 40, ஸ்டூவர்ட் லிட்டில் 29 ரன் அடித்தனர். 46.4 ஓவர்களில் 286 ரன் எடுத்து அயர்லாந்து ஆல் அவுட் ஆனது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

The post 2வது ஒருநாள் போட்டி: 48 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி appeared first on Dinakaran.

Tags : England ,Nottingham ,Ireland ,Dinakaran ,
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்