×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் விலை மாற்றமின்றி இனிப்பு வகைகள் விற்பனை!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் விலை மாற்றமின்றி இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. காஜூ கட்லி 250 கிராம் ரூ.260, நட்ஸ் அல்வா 250 கிராம் ரூ.190, மோத்தி பாக் 250 கிராம் ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.320, நெய் பாதுஷா 250 கிராம் ரூ.190-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு 500 கிராம் ரூ.450 விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 10-ம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் இனிப்பு வகைகள் விற்கப்படுகிறது.

 

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் விலை மாற்றமின்றி இனிப்பு வகைகள் விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Diwali ,CHENNAI ,Aavin ,Kaju Cudli ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...