×

நவ.15 கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன் கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும்

 

திருமயம். நவ. 9: நவ.15 கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன் கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயனடை வேண்டும் என்று அரிமளம் வட்டார வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் கடந்த சில சில வாரங்களாக சம்பா நடவு பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் தற்போது கிணற்று நீர் பாசன வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே நடவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இது குறித்து அரிமளம் வேளாண்துறை துணை இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

2023- 24 ம் ஆண்டிற்கான சிறப்பு பருவம் நெல் II (சம்பா) பயிர் சாகுபடி செய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் தாங்கள் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதனால் இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் பாதிப்புகளிலிருந்து வாழ்வாதாரத்தையும், வருவாய் இழப்பையும் விவசாயிகள் சரி செய்து கொள்ள பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.513 செலுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 15ம் தேதியாகும்.
எனவே கடைசி நாள் வரை விவசாயிகள் காத்திருக்காமல், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றில் அடங்கல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், முன்மொழிவு படிவம் மற்றும் பதிவு படிவம் ஆகிய ஆவணங்களுடன் பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும்.மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்து வலைதள பதிவு ரசீதை பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நவ.15 கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன் கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!