×

தனியாரிடம் ஒப்பந்தத்தை ரத்து செய்யாததால் அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.453 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்

சென்னை: தனியார் நிறுவனத்துடன் செய்த மின் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தவறியதால், 2020 மார்ச் மாதம் முதல் 2021 நவம்பர் வரை, ஒரு யூனிட் மின்சாரம் கூட வாங்காத நிலையில், மின்வாரியம் ரூ.453.04 கோடியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சி.ஏ.ஜி. கணக்கு தணிக்கையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துகுறித்து, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பீபிஎன் என்கிற தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் 330.50 மெகாவாட் மின்சாரம் வாங்க, 1997ம் ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த மின் ஒப்பந்தம், வணிகச் செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து 30 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இத்திட்டதுக்கு எரிபொருளாக இயற்கை எரிவாயு மற்றும் நாப்தாவின் (திரவ ஹைட்ரோகார்பன் வகை எரிபொருள்) கலவையை 70:30 என்ற விகிதத்தில் பயன்படுத்த ஒன்றிய மின்சார ஆணையம் அனுமதி அளித்தது.

இயற்கை எரிவாயு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இயற்கை எரிவாயு கிடைக்கும் வரை மாற்று எரிபொருளாக நாப்தாவை (அதிக விலை எரிபொருள்) 100 சதவீதம் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 100 சதவீதமும் நாப்தாவை பயன்படுத்தினால் தமிழ்நாடு மின் வாரிய கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பீபிஎன் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரல் 2001ல் 15 உற்பத்தி ஆலைகளில் முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. மின்வாரியமும், தனியார் நிறுவனத்திடமிருந்து ஜூன் 2016 வரை மின் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின்படி கட்டணம் செலுத்தி வாங்கியது. அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின் காலம் முடிவடைந்தவுடன், பீபிஎன் நிறுவனம் நாப்தாவை பயன்படுத்தி ஆலையை 2021ம் ஆண்டு வரை இயக்குவதற்காக, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க கோரியது.

இதற்கு, திட்டத்தின் நிதி பங்களிப்பு முற்றுபெற ஏதுவாக தற்காலிக நடவடிக்கையாகவே நாப்தாவை மாற்று எரிபொருளாய் பயன்படுத்த பீபிஎன் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஆலை இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் போது நிலையான கட்டணங்களை தனியார் நிறுவனம் கோரலாம் என்று ஜூன் 2016க்கு பிறகிற்கான எந்த விலைப்பட்டியலுக்கும் பணம் செலுத்தப்படாது என்றும் தமிழ்நாடு மின்வாரியம் கூறியது. தொடர்ந்து, நாப்தாவை எரிபொருளாக கொண்டு மின் உற்பத்தியை மேற்கொள்ளவதற்கு எரிபொருள் வழங்கும் ஒப்பந்தத்தை இனி நீட்டிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் இல்லாமல் உற்பத்தி திறன் மற்றும் இருப்பை அறிவிக்கக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்வைக்க மின்வாரிய குழுமம் தீர்மானித்தது.

இருப்பினும், தனியார் நிறுவனம் ஜூன் 2016க்கு பிறகும் நிலையான கட்டணங்களுக்கான விலைப்பட்டியல்களை தொடர்ந்து சமர்ப்பித்து, ஏப்ரல் 2021 வரையிலான காலத்துக்கு மொத்தம் ரூ.813.24 கோடி கோரியது. எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கூடாது என்ற குழுமத்தின் முடிவு இருந்தும், மின்வாரியம் தரப்பில் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துகொள்ளவில்லை. மேலும் அது சம்பந்தமான எந்த மனுவையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும், 2016 முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்திற்கு கோரிய விலைப்பட்டியல்களுக்கு தற்காலிக அடிப்படையில் மார்ச் 2020 மார்ச் மாதத்திலிருந்து 2021 நவம்பர் வரையில் மின்வாரியம் ரூ.453.04 கோடி செலுத்தி உள்ளது. வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தனியாரிடம் ஒப்பந்தத்தை ரத்து செய்யாததால் அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.453 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : PA ,Chennai ,PA GG ,Dinakaran ,
× RELATED தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில்...