மும்பை: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த விவகாரத்தில், ஒன்றிய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க தவறினால், உச்ச நீதிமன்றம் நடவடிக்கையில் இறங்கும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்துள்ளார். இதற்கு மும்பை பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ அத்துல் பட்கல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாற்காலியில் அமர்ந்து கொண்டு முடிவு எடுப்பதால், நாட்டை எவ்வாறு சமூகமாக நடத்திச் செல்ல முடியும்.
அரசு செய்ய வேண்டிய வேலையை சுப்ரீம் கோர்டே செய்ய வேண்டுமானால், தேர்தல் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? ஜனநாயகம் எதற்கு? எல்லாவற்றையும் நாற்காலியில் அமர்ந்தபடி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே நிர்வகிக்கட்டும். இவ்வாறு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. அத்துல் பட்கல்கர் கூறினார்.
The post தேர்தலும், நாடாளுமன்றமும் வேண்டாம்.. உச்ச நீதிமன்றமே நாட்டை ஆளட்டும்..: மும்பை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம் appeared first on Dinakaran.