×

நொச்சிக்குப்பம் லூப் சாலை பிரச்னை மீனவர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நொச்சிக்குப்பம் மீனவர் பிரச்னை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர், ‘‘நொச்சி குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை சென்னையை அழகுப்படுத்தும் நடவடிக்கையில் கடைகள் அகற்றப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அமைக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’என்றார். இதே போல மயிலை த.வேலு(திமுக), ஆர்.பி.உதயகுமார்(அதிமுக), ஜி.கே.மணி(பாமக), சிந்தனை செல்வன்(விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் அதிகம். மக்கள் பிரஷ்ஷான மீன்கள் வாங்க அங்கு செல்கின்றனர். நொச்சிகுப்பம் லூப் சாலையில், மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லூப் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மீனவர் சங்கங்களின் உதவியுடன் சீர்படுத்தப்பட்டுள்ளது. இச்சாலையில், மீனவர் சங்கங்களே சாலை போக்குவரத்தை முறைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது போக்குவரத்து சீராக உள்ளது. முதல்வரின் நடவடிக்கையால், இவ்வழக்கில் தமிழக அரசு மீனவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களை வழக்காட செய்து மீனவர்களுக்கு தேவையான உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் மீனவர்கள் தரப்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத்துள்ளனர். மாநகராட்சி ஆணையரும் ஐகோர்ட்டில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரு பக்கமும் மீன்கள் மீனவர்கள் வியாபாரம் செய்யவதை உறுதிப்படுத்துவோம் என பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு ஜூன் 19 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது.

The post நொச்சிக்குப்பம் லூப் சாலை பிரச்னை மீனவர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Legislative Assembly ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Nochikuppam ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...