×

நீலகிரியில் உறை பனி தாக்கம் குறைந்துள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உறை பனியின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தேயிலை செடிகள் பசுமையாக காட்சியளிப்பது விவசாயிகளை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை கடும் உறை பனி காணப்படும். இச்சமயங்களில் புல்வெளிகள், தேயிலை செடிகள், வனங்கள் மற்றும் மலர் செடிகள் ஆகியவை காய்ந்து விடும். இதனால் விவசாயிகள் பாதிப்பது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை செடிகள் பணியால் அதிகளவு பாதிக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் பசுந்தீரைகள் இன்றி பழுப்பு நிறத்தில் தேயிலை தோட்டம் காட்சியளிக்கும்.

ஆனால், இம்முறை இதுவரை உறைப்பனியின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. கடந்த வாரம் ஒரு சில தினங்கள் பனி விழுந்த போதிலும் தற்போது மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக உழைப்பின் தாக்கம் குறைந்த காணப்படுகிறது.

இதனால், இதுவரை தேயிலை தோட்டங்கள் பனியின் காரணமாக பாதிக்காமல் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் தற்போதும் தேயிலை செடிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. உறைப்பனி விழும் முன் இந்த பசுந்தல இலையை அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post நீலகிரியில் உறை பனி தாக்கம் குறைந்துள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiri district ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...