×

‘புரெவி’ புயலால் ஒரு மி.மீ மழையே பதிவு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன

நாகர்கோவில், டிச.4:வங்க கடலில் புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையங்கள் கூறி வந்தது. இதனால் ஏற்கனவே நிரம்பும் நிலையில் இருந்த பாசன அணைகளில் பெருமளவு தண்ணீர் வரும் என்று கருதப்பட்டது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக மழை இல்லை. அதே வேளையில் அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் பாதுகாப்பு கருதி திறந்துவிடபட்டது.நேற்று காலை வரை ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்திருந்தது. அணைகளில் நீர்மட்டம் மளமளவென்று சரிந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள்  மூடப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.2 அடியாகும். அணைக்கு 196 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.77 அடியாகும்.

அணைக்கு 120 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 19.90 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-1ல் 13.68 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 13.77 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 34.23 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.3 அடியாகும். மாம்பழத்துறையாறு அணையில் 20 கன அடியும், முக்கடல் அணையில் இருந்து 7.42 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதர அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

நேற்று காலை வரை அதிகபட்சமாக சுருளோட்டில் 4.2 மி.மீ மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி 2.2, கன்னிமார் 2.4, நாகர்கோவில் 1.6, பெருஞ்சாணி 3.8, புத்தன் அணை 3.6, சுருளோடு 4.2, மாம்பழத்துறையாறு 4, அடையாமடை 3, முள்ளங்கினாவிளை 2, ஆனைக்கிடங்கு 2.4, முக்கடல் அணை 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை சராசரியாக 1.11 மி.மீ மழை மட்டுமே பெய்திருந்தது.குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடலோர பகுதிகள், மலையோர பகுதிகள் என்று அனைத்து இடங்களிலும் மப்பும் மந்தாரமும் காணப்பட்டதுடன் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. பகல்வேளையில் சிறிது நேரம் வெயிலடித்தது.

Tags : storm ,Perunchani ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...