×

திருவலம், பள்ளிகொண்டாவில் சோகம் பொன்னை ஆற்றில் மூழ்கி இரட்டையர்கள் உட்பட 3 பேர் பலி தொடரும் உயிரிழப்புகளை தடுக்க கோரிக்கை

திருவலம், நவ.3: பொன்னை ஆற்றில் மூழ்கி இரட்டையர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். திருவலம் பள்ளிகொண்டாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பாலாறு, பொன்னையாறு உள்ளிட்டவற்றில் வெள்ளம் பாய்ந்ேதாடுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளம் வருவதால் பொதுமக்கள் குடும்பத்துடன் நீர்நிலைகளுக்கு சென்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதில் சில இடங்களில் மழை வெள்ளத்தை பார்த்தவுடன் சிலர் அதில் இறங்கி குளிக்கவும் செய்கின்றனர். ஆனால் பாலாற்றில் அனைத்து இடங்களிலும் மணல் கொள்ளையர்களின் கைவரிசையால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. தற்போது வெள்ளம் வந்ததால் அந்த பள்ளங்களில் மணல் நிரம்பி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மணல்புதை குழிகளாக காட்சியளிக்கிறது. இதையறியாமல் பாலாற்றில் நடந்து சென்று வெள்ளத்தை பார்க்கும் மக்கள் இந்த புதைகுழிகளில் சிக்கி மாண்டு விடுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் சீக்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பல்லவர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார், விவசாயி. மனைவி லதா. இவர்களது மகன்கள் நவீன்(15), நரேஷ் (15) இரட்டை சகோதரர்கள். அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று மாலை பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றுள்ளனர். வெள்ளத்தை பார்த்தவுடனே அதில் இறங்கி நவீன், நரேஷ் குளிக்க தொடங்கியுள்ளனர். அப்போது 2 பேரும் திடீரென ஆற்று நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் நீரில் மூழ்கிய இரட்டையர்களை மீட்டு, திருவலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த இரட்டை சகோதரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சடலமாக கிடந்த இரட்டையர்களை பார்த்து கதறி அழுதனர். சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வாணியம்பாடியில் பாலாற்றில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன், குடியாத்தம் கவுன்டன்ய மகாநதியில் தாய் மற்றும் 2 மகள்கள், ஒடுகத்தூர் உத்திரகாவேரி சிற்றாறில் மூதாட்டி, அமிர்தி ஆற்றில் சிக்கி ஒரு வாலிபர், நேற்று திருவலம் அருகே இரட்டையர், பள்ளிகொண்டா கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் என இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.

எனவே நீர்நிலைகளில் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாக்ஸ்...போலீசார் எல்லை பிரச்னைஇரட்டை சகோதரர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த சிப்காட் மற்றும் திருவலம் போலீசார் எல்லை பிரச்னையால் வழக்கு பதிவு செய்வதில் தயக்கம் காட்டினர். இதனையடுத்து அங்கு வந்த திருவலம் எஸ்ஐ பிச்சாண்டி சடலங்களை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.பாக்ஸ்...கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலிபள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் உள்ள கோயில் குளத்தில் வாலிபர்கள் சிலர் நேற்று குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, வாணியம்பாடி மதுரா கோணாமேடு கிராமத்தை சேர்ந்த அருண்(30) மற்றும் அவரது நண்பர்களும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அருண் திடீரென குளத்தில் மூழ்கினார். இதனால் அங்கிருந்த மற்ற நண்பர்கள் அவரை தேடினர். ஆனாலும் அவர் குளத்து நீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகலறிந்த பள்ளிகொண்டா போலீசார், குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி குளத்தில் மூழ்கி இறந்த அருணை சடலமாக மீட்டனர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து அருண் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேப்சன்...பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் கோயில் குளத்தில் மூழ்கி இறந்த வாலிபரின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.திருவலம் பொன்னையாற்றில் மூழ்கி இறந்த இரட்டை சகோதரர்களின் சடலத்தை பார்த்து கதறி அழும் உறவினர்கள். உள்படம்: நவீன்(15), நரேஷ்அரசு, தனியார் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் தொடங்கியது

Tags : Pallikonda ,river ,Ponnai ,twins ,
× RELATED தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை பள்ளிகொண்டாவில்