×

மாநகர கமிஷனர், ஐஜி பங்கேற்பு வீணாகிய பூசணிக்காய்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில்

திருச்சி, டிச.3: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின் முதல் முறையாக முருகனின் அக்கா மகன் உள்பட 4 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருச்சி லலிதா ஜூவல்லரியின் சுவரை துளையிட்டு கடந்தாண்டு அக்.2ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான கனகவள்ளியின் மகன் சுரேஷ் அக்.10ம் தேதி செங்கம் நீதிமன்றத்திலும், 11ம் தேதி கொள்ளை கும்பல் தலைவர் முருகன் பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன் ஆட்கொல்லி நோய் முற்றி கடந்த மாதம் 27ம் தேதி சிறையிலேயே இறந்தார்.

இந்நிலையில், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கடந்த 27ம் தேதி திருச்சி ஜேஎம்1 நீதிமன்றத்தில், இறந்த முருகனை தவிர மற்ற 4 பேரில், முருகனின் அக்கா கனகவள்ளி, இவரது மகன் சுரேஷ், உறவினர் மணிகண்டன், நண்பர் மதுரை கணேசன் ஆகியோருக்கு 125 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின் முதல் முறையாக இந்த வழக்கு ஜேஎம்1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் சுரேஷ், கனகவள்ளி உள்பட 4 பேரும் மாஜிஸ்திரேட் கார்த்திக் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரித்த மாஜிஸ்திரேட் கார்த்திக், வரும் 9ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags : Municipal Commissioner ,IG ,robbery ,Trichy Lalita Jewelery ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...