திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் நியமனம்

சென்னை, டிச.3: திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மாநகர் மாவட்டத்தின் மாவட்ட, பகுதி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, காஜாமலை அருள்ஜோதி, மாவட்ட பொருளாளர்  கல்லுக்குழி மனோகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் அருணாசலம், செயலாளர் ராஜ்குமார். ஜெ.பேரவை மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பத்மநாதன்.

எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட தலைவர் அம்மன் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் முத்துகுமார். மகளிரணி மாவட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் தமிழரசி. மாணவரணி மாவட்ட தலைவர் சுதாகர், செயலாளர் கார்த்திகேயன். அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் கந்தன், செயலாளர் ராஜேந்திரன். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராஜேந்திரன். சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட தலைவர் ஜேசு மலைக்கனி, செயலாளர் மீரான். விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ரெங்கராஜ், செயலாளர் கருடா நல்லேந்திரன். மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் வின்சென்ட், செயலாளர் தென்னூர் அப்பாஸ்.

மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் சுப்பையா, செயலாளர் டாக்டர் செந்தில்குமார். இலக்கிய அணி மாவட்ட தலைவர் உறந்தை ஜெயராமன், செயலாளர் கவிஞர் பழனிச்சாமி. அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் நடராஜன். இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் அலியாஸ். வர்த்தக அணி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் ஜோசப் ஜெரால்டு. கலைப்பிரிவு மாவட்ட தலைவர் வாசு, செயலாளர் அழகரசன் விஜய்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>