ஈட்டுத்தொகையுடன் ஆண்களுக்கு நவீன கு.க. துறையூர் அருகே கொள்ளையடிக்கும் திட்டம் ஆயுதங்களுடன் 6 பேர் கைது

துறையூர், டிச.3: துறையூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் நின்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். துறையூர் புறவழிச்சாலை சொரத்தூர் சாலை பிரிவில் சந்தேகத்துக்கிடமாக 6 இளைஞர்கள் ஆயுதங்களுடன் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். போலீசை கண்டதும் அந்த இடத்தை விட்டு நகர முயன்ற அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

இதனையடுத்து அவர்களை ஜீப்பில் ஏற்றி துறையூர் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் விநாயகர் தெருவைச் சேர்ந்த லோகேஷ்வரன்(34), அரவிந்தசாமி(20), கார்த்தி(19), சாரணீஷ்(20), சந்தோஷ்(19), விஜய்(21) என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே நடந்த குற்றங்கள் தொடர்பாக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. மேலும் அவர்கள் 6 பேரும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் கூடியிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் துறையூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் புவியரசு முன் ஆஜர் செய்தனர்.

Related Stories:

>