×

கட்டிமேடு ஊராட்சியில் மக்கள் திட்டமிடல் இயக்க கூட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.3: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் மக்கள் திட்டமிடல் இயக்க கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், விஏஓ யூசுப், கால்நடை மருத்துவர் விஸ்வேந்தர், மக்கள் திட்டமிடல் இயக்க செயலர் கமலா,கிராம அளவிலான வறுமை ஒழிப்பு அமைப்பாளர் வினோதா, துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டரை். கூட்டத்தில் மின்சாரம் குடிநீர், கால்நடை மற்றும் வடிகால் மற்றும்கிராம வளர்ச்சி திட்டப் பணிகள் 20 21 - 22 க்கான வளர்ச்சித் திட்டபணி குறித்து பேசப்பட்டது.

Tags : meeting ,Planning Movement ,Kattimedu ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...