×

வேளாண் உதவி இயக்குனர் தகவல் வாழை, மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

மன்னார்குடி, டிச. 3: திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராபி பருவத்தில் உள்ளிக்கோட்டை மற்றும் வடுவூர் சரகத்திற்கு உட்பட்ட கிராமங் களில் 100 ஹெக்டரில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதைபோல் வலங்கைமான் மற்றும் ஆவூர் சரகத்தில் 150 ஹெக்டரில் வாழை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளி பயிருக்கு 1.03.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.934ம், வாழை பயிருக்கு 1.3.2021 ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.3142 ம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களின் வாயிலாகவும் பீரிமியத் தொகை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். மரவள்ளி பயிர் காப்பீடு உள்ளிகோட்டை மற்றும் வடுவூர் சரக விவசாயிகள் மட்டும் மற்றும் வாழை பயிர்க்கு வலங்கைமான் மற்றும் ஆவூர் சரக விவசாயிகள் மட்டும் காப்பீட்டு தொகை செலுத்தி பயன்பெறலாம் மேலும் தகவலுக்கு, மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவர சன் 95858 74567 மற்றும் வலங்கைமான் தோட்டக்கலை உதவி இயக்குநர் நீதிமாணிக்கம் 84893 64388 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Assistant Director of Agriculture Farmers ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு