×

தோட்டக்கலை துணை இயக்குநர் தகவல் மத்திய அரசு கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேர் கைது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

திருவாரூர், டிச.3: மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 170 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது மற்றும் விவசாயிகளை உடனே அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று அவசர சட்டங்களையும் ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக திருவாரூர் பனகல் சாலையில் இருந்து பேரணியானது கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் துவங்கி ரயில் நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாதுஷா, மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட செயலாளர்கள் நவாஸ் ,குத்புதீன், பொருளாளர் சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் விவசாய அணி மாநில செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாநில பொருளாளர் இப்ராஹிம் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது குடை பிடித்தவாறு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தையொட்டி போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு திருவாரூர் பழைய சாலையில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Tags : Deputy Director ,siege protest ,Central Government ,
× RELATED ₹14 கோடி செலவில் தொடங்கியது வலை பின்னும் கூடம்