×

குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு

கறம்பக்குடி, டிச. 3: கறம்பக்குடி அருகே குட்கா விற்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கறம்பக்குடி அருகே நரங்கியபட்டு வேளார் தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (26). இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்தபோது குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும்ட போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Valipar ,
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!