×

ஜெயங்கொண்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் அணிவகுப்பு பேரணி

ஜெயங்கொண்டம், டிச.3: ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற போலீசார் அணிவகுப்பு பேரணியை அரியலூர் எஸ்.பி.சீனிவாசன் துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.பி. னிவாசன் தலைமையில், அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது திருச்சி - சிதம்பரம் சாலை, பஸ் நிலையம் சாலை நான்கு ரோடு வழியாக நகராட்சி அலுவலகத்தின் முன்பு முடிந்தது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுத்து, கைது செய்யும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், குணசேகரன், மலைச்சாமி, பேபி, சிவகுமார், மதிவாணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...