×

இடங்கண்ணி கிராமத்தில் பட்டுப்போன பனைமரம் அகற்றம்

தா.பழூர், டிச. 3: தினகரன் செய்தி எதிரொலியால் தா.பழூர் அடுத்த இடங்கண்ணி கிராமத்தில் பட்டுப்போன பனைமரம் அகற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் இருந்து அண்ணகாரன்பேட்டை செல்லும் சாலையின் இறக்கத்தில் பனைமரம் பட்டுபோனது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இந்த சாலையில் அரசு பேருந்தும் இயங்கி வருகிறது. பட்டுப்போன பனைமரத்தின் அருகே மின்கம்பங்கள் வழியே கம்பிகளும் குறுக்கே செல்கிறது.

தற்போது புயல், மழை என பல்வேறு இயற்கை இடர்பாடுகள் உருவாகி வரும் நிலையில் இந்த பனைமரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் செல்பவர்கள் மேல் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே பனைமரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் சாலை பணியாளர்களை கொண்டு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பனைமரம் அகற்றப்பட்டது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Removal ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...