×

நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

தா.பழூர், டிச. 3: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், கொள்ளிடம் உபவடி நிலப்பகுதியில் வேளாண் செய்முறை விளக்கத்தை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நெற்பயிரில் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தொழில்நுட்பங்களுக்காண ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கார் துவக்கி வைத்தார். அப்போது நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், வேளாண்மை நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

நெற்பயிரை தாக்கக் கூடிய நோய்களில் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து நோயியல் பேராசிரியர் ராமநாதன், உப வடிநில பகுதியில் செயல்படக்கூடிய திட்டங்கள் குறித்து திட்டத்தின் உளவியல் வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் இளமதி, ஒருங்கிணைந்த உர நிர்வாக முறை குறித்து உழவியல் இணை பேராசிரியர் ராஜீ, நெல் ரகங்கள் குறித்து பயிர் மரபியல் இணைப்பேராசிரியர் சசிகுமார் பேசினார். ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர் பிரேம்குமார், ரங்கன் மற்றும் ராஜதுரை செய்திருந்தனர். இந்த பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது