×

வேதாரண்யம் பகுதியில் 10 மணி நேரம் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம், டிச.3: வேதாரண்யம் பகுதியில் நேற்று காலை முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை மானாவாரி சம்பா சாகுபடிக்கு நல்ல மழை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே வேளையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை வேதாரண்யம் தாலுகாவில் புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் , வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இரண்டாவது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துவிட்டு வீடுகளிலேயே முடங்கி போய் உள்ளனர். வேதாரண்யம் தாலுக்கா ஆதனூர், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், தென்னம்புலம், நெய்விளக்கு, செம்போடை ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. நேற்று பெய்த மழை வேதாரண்யம் மானாவாரி பகுதியில் 10000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கு ஏற்ற மழை என விவசாயிகள் தெரிவித்தனர்.
மழை காரணமாக வேதாரண்யத்தில் ஒட்டு மொத்த வர்த்தகம் பாதிக்கப் பட்டது.

Tags : area ,Vedaranyam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...