×

காரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

காரைக்கால், டிச.3: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகில் அமைந்துள்ள வாக்குப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை நேற்று (புதன்கிழமை) காலை காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், மேலும் துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு அதில் இருக்கும் இயந்திரங்கள் துணை ஆட்சியர் வருவாய் கீழ்தளத்தில் எடுத்து வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. மேலும் பெல் கம்பெனியில் இருந்து வந்துள்ள நான்கு இன்ஜினியர்கள் மேற்பார்வையில் இது நடைபெறுகிறது. இதில் வாக்குப்பதிவு எந்திரங்கள்-378 மற்றும் கண்ட்ரோல் யூனிட்200 மற்றும் விவிபிஏடி எந்திரங்கள்-196, இவை அனைத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்படுகின்றன.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...