ராஜபாளையம் கரிசல்குளத்தில் சுகாதார வளாகம் கட்ட பூமிபூஜை தங்கபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராஜபாளையம், டிச. 3: ராஜபாளையம் அருகே மேலப்பட்டு கரிசல்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.8 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் எம்எல்ஏ தங்கபாண்டியன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அம்பேத்கர் நகரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்திடும் பணி பூமிபூஜையிலும் தங்கபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்.

Related Stories:

>