பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

மானாமதுரை, டிச.3: மானாமதுரை ஒன்றியத்தில் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் 21ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வழிகாட்டுதலின்படி துவங்கியது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அன்புநாதன், வசந்தி ஆகியோர் மேற்பார்வையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் தலைமையில் கிராமம் கிராமமாக ஆய்வுகள் நடக்கிறது.  இது குறித்து வட்டார வளமைய ஆசிரியர்கள் கூறியதாவது,  இந்த கணக்கெடுப்பு கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் துவங்கியது. வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் பள்ளி செல்லா,இடைநிற்றல் குழந்தைகள் இருந்தால் அது குறித்து 97888 58959 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories:

>