×

மீனவ கிராமங்களில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை

சாயல்குடி, டிச.3:  புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம், முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. உச்சிப்புளி, திருப்புல்லானி, சாயல்குடி பகுதி கடற்கரை கிராமங்களில் சற்று பலமாக காற்று வீசி வருகிறது.  மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், வழக்கத்திற்கு மாறாக கடல்கள் ராட்சத அலையுடன் சீற்றத்துடன் காணப்பட்டது. திடீரென அமைதியான சூழல் ஏற்பட்ட நிலையில் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர், ரோச்மா நகர், மூக்கையூர், மாரியூர், கீழமுந்தல், திருப்புல்லானி அருகே உள்ள சேதுக்கரை உள்ளிட்ட கடல்கள் நேற்று காலை மற்றும் மாலை நேரத்தில் உள்வாங்கியது. இதனால் கிராம மார்க்கம் உள்ள கடல் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றது. திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவ கிராமங்களில் பரபரப்புடன் கூடிய அச்சம் ஏற்பட்டது. இதனால் கிராம மார்க்கம் உள்ள கடல் கரையோரம் பாதுகாப்பாக நிறுதப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றது. கீழமுந்தல் உள்ளிட்ட சில கடற்கரை கிராமங்களில் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக புயல் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபோல்  லேசான மழையுடன் பலத்த காற்று வீசியது. இதில் ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் பள்ளியின் ஓடு வகுப்பறை இடிந்து விழுந்தது. தகவலறிந்த ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இடிபாடுகளை அகற்ற பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இது குறித்து சி.இ.ஓ புகழேந்தி கூறும்போது, அந்தப்பள்ளியின் பயன்படாத பகுதியில் தான் ஓடுகளால் ஆன மேற்கூரை இடிந்துள்ளது. புயலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, வேர்க்கோடு பாம்பன் உள்ளிட்ட பகுதி தொடக்கப் பள்ளிகளில் ஆவணங்கள் அனைத்தும் வேறு பள்ளிக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள பள்ளிகளின் ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags : school ,fishing villages ,sea ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி