புயல்பாதிப்பு ஏற்பட்டால் கீழக்கரை நகராட்சியை தொடர்பு கொள்ளலாம்

கீழக்கரை, டிச.3:  கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவாகியுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் தங்களது உடைமைகளான குடும்ப அட்டை, வீட்டு பத்திரம், பட்டா மற்றும் பணம் மதிப்புள்ள ஆவணங்களை மழையில் நனைந்து விடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். மேலும் தொலைபேசி எண்.04567 241317, நகராட்சி ஆணையாளர் எண்.96008 44688, நகராட்சி பொறியாளர் 73973 96283, துப்புரவு ஆய்வாளர் 86089 69137, நகரமைப்பு ஆய்வாளர் 98658 86904, பொதுப் பணி மேற்பார்வையாளர் 98943 64386, உதவியாளர் 9597183684 ஆகிய எண்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ளவும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>