×

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம், டிச.3:  ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பட்டினம்காத்தானில் நடைபெற்றது. மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் தீனதயாளன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்  முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழகம் மீட்போம் என்ற காணொலி காட்சி வாயிலான பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமாக பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் திசைவீரன், முருகவேல் மற்றும் பெருநாழி போஸ், நல்லசேதுபதி, திவாகரன் அகமதுதம்பி, மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK Activists Meeting ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது