வத்தலக்குண்டு அருகே ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

பட்டிவீரன்பட்டி, டிச. 3:  வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி  காலனியில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் வங்கியின் கீழ்தளத்தில்  ஏடிஎம்  இயந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் இதில் பணம் நிரப்புவதற்காக வங்கி பணியாளர்கள் வந்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் தனது உருவம் தெரியாதவாறு தலையில் முண்டாசு கட்டி கையில் ஆயுதத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை ஒருவர் உடைக்க முயன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவரால் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் அப்படியே விட்டுவிட்டு கதவை திறந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால்  ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த லட்சக்கணக்காண பணம் தப்பியது. இதுகுறித்து தனியார் வங்கி கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>