மழை, குளிருக்கு 3 மாடுகள் பலி

புவனகிரி, டிச. 3: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

இந்நிலையில் நேற்று கிள்ளை குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மாடு மழை, குளிரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தது.மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மாடு ஒன்றும் இறந்தது. இதுபோல் கிள்ளை மீனவர் தெருவில் வசிக்கும் நல்லரசன் என்பவரின் பசு மாடும் மழை குளிரால் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>