புதிய உத்யம் பதிவு சான்றிதழ் பெற அழைப்பு

ஊட்டி, டிச. 3: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் மறு வரையறை செய்யப்பட்டு, 2020  ஜூலை 1 முதல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு சான்றிதழ் மேற்கொள்வதற்கான செயல்முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே பெற்றுள்ள இஎம., பகுதி 2 மற்றும் உத்யோக் ஆதார் சான்றிதழ்கள் மற்றும் 1.7.2020லிருந்து பான் கார்டு மற்றும் ஜிஎஸ்டி., சான்றிதழ் விவரங்கள் அளிக்காமல் தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள உத்யம் பதிவு சான்றிதழ்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே தொழில் நிறுவனங்கள் உடனடியாக https://udyamregistration.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து புதிய உத்யம் பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உத்யம் பதிவு சான்றிதழ் பெறுவதற்கு பதிவு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Related Stories:

>