×

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

அந்தியூர்,டிச.3: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பர்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க தலைவர் சாவித்திரி தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், மாத உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், அரசு மற்றும் தனியார்துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சட்டப்படி 4 மணி நேர வேலையும், முழு நேர ஊதியம் வழங்கவும், வேலை நாட்கள் 200 நாட்கள் என உயர்த்தி மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்பு அந்தியூர் வட்டாட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.சத்தி: தாளவாடி தாலுகா மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி தாலுகா அலுவலகம் முன்பு பஸ் நிலையம் அருகே 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Governor ,Anthiyur ,road ,Office ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...