×

வேளாண் சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோபி, டிச. 3: புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோபி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புதிய வேளாண் சட்டம், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டம், மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோபி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கனகராஜ் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஷ்வரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் இ.கம்யூ கட்சியினர் பேரணியாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்றனர். மேலும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி பகுதியை 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவன் கட்சி கொடியை ஏந்தியபடி சென்ற  காட்சி அனைவரையும் ஈர்த்தது.

Tags : Communists ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள்...