தங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்

வேளச்சேரி: வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தேவி(30). கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் அதிக மழை பெய்யும் என்ற பயத்தில் தனது கணவரின் சொந்த ஊரான செய்யாறுக்கு குடும்பத்தோடு சென்றார். மழை நின்றதால் கடந்த 2 தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது 3 சவரன் தங்க நகைகள்  திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி ஆனார்.  

 இதுகுறித்து புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் தேவி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில்  திருவள்ளூரில் வசிக்கும் அவரது அண்ணன் ரவி(42)  என்பவரிடம் விசாரித்த போது அவர்தான் நகை திருடினார் என்பது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவியை கைது சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>