காரில் திடீர் தீவிபத்து

தாம்பரம்:  மேடவாக்கம் - சித்தாலப்பாக்கம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் குமார்(35).நண்பரை பார்ப்பதற்காக கூடுவாஞ்சேரி சென்றுவிட்டு காரில் நேற்று இரவு ஜிஎஸ்டி சாலையில் மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.   பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்தது.உடனே, குமார் காரிலிருந்து இறங்கி பார்த்தபோது காரில் அதிக புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சுமார் ஒரு மணி நேரம் கொழுந்துவிட்டு தீ எரிந்தது. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.இந்த சம்பவத்தால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>