3 அம்மன் சிலைகள் திருட்டு: மர்மநபர்களுக்கு வலை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே அம்மன் கோயிலில் இருந்த 3 அம்மன் கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தின் ஓஎம்ஆர் சாலையில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. கோயிலை தினமும் காலை 9 மணிக்கு திறந்து இரவு 9 மணி மூடுவது வழக்கம்த. இங்கு, கற்பகம் அம்மாள் என்பவர் பூசாரியாகவும், நிர்வாகியாகவும் உள்ளார். இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கற்பகம் அம்மாள், கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் கோயிலை திறக்க வந்தார். கோயிலை திறந்து உள்ளே சென்றபோது, கோயிலின் 3 பக்க சுவர்களிலும் தனித்தனி சன்னதிகளில் இருந்த சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள சாமுண்டி, துர்கை, பிரம்மகி ஆகிய அம்மன் கற்சிலைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியைடந்தார். தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>