×

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 480 ஏக்கர் ஏரி உள்ளது. இதற்கு வெங்கல், வெங்கல்குப்பம், அத்தங்கிகாவனூர், அழிஞ்சிவாக்கம், பெருமுடிவாக்கம், தாங்கல் வழியாக நீர்வரத்து அமைப்பு உள்ளது. ஆனால், தாங்கல் பகுதியை தனி நபர்கள் சிலர் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதற்கு முன்னர், 10 ஆண்டுகளாக தண்ணீர் சரிவர வருவதில்லை. இதனால், 40 ஆண்டுகளாக திருக்கண்டலம் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவராக மதன், பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பாலலட்சுமி வெங்கடேசன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக சுதாகர் ஆகியோர் திருக்கண்டலம் சுற்று வட்டார விவசாயிகள் தாங்கல் பகுதியில் 55 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி திருக்கண்டலம் ஏரியில் தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யகோரிக்கை மனு வழங்கியிருந்தனர். அதன்பேரில், திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் தலைமையில் அவரது சொந்த முயற்சியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாங்கல் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டது.

Tags : drainage canal ,Thirukandalam Lake ,Periyapalayam ,
× RELATED பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி...