மேற்கு மாவட்ட திமுக சார்பில் 25 இடங்களில் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.2: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டம் தளி, ஓசூர், வேப்பனஹள்ளி ஆகிய தொகுதிகளில் 25 இடங்களில் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 250 பேருக்கு பொற்கிளி வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  உரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>