தீபாவளி சீட்டு நடத்தி ₹30 லட்சம் மோசடி எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

தர்மபுரி, டிச.2: தர்மபுரி அருகே தீபாவளி சீட்டு நடத்தி ₹30லட்சம் மோசடி செய்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தாத எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவகுமார் (30). இவர், தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ₹200, ₹300, ₹700 வீதம் வசூல் செய்துள்ளார். இதில், 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். ஆனால் தீபாவளியின்போது, சிவகுமார் பணத்தை திரும்ப தரவில்லை. இதுகுறித்து, அதேபகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி ஆசிரியர் விஸ்வநாதன், அதியமான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ₹30 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சிவக்குமாரின் மீது அளித்த புகார் மனுவை சரிவர விசாரணை மேற்கொள்ளாத, எஸ்ஐ பார்த்திபனை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்து, எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>