×

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பஞ்., அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

கடத்தூர், டிச.2:  தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில், சுமார் 175 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் 16, 17, 18 ஆகிய நாள்களில், பெண்கள் பணியாற்றினர். அதற்கான வேலை உத்தரவு மற்றும் ஆட்கள் விபரம் கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அலுவலகத்தில் வேலை உத்தரவு நகலை தவற விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே செய்த பணிகளுக்கு முறையான ஊதியம் வழங்க கோரியும் தற்போது அந்த மூன்று நாட்களுக்கு நிதி வழங்காததை கண்டித்தும், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே 100க்கும் மேற்பட்ட பெண்கள், முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.பின்னர் பஞ்சாயத்து தலைவர் பாப்பாத்தி பானுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்ேபாது பஞ்சாயத்து தலைவி கூறுகையில், பணி செய்தற்கான விபரங்கள் குறித்து, பணிதள பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிடிஓ அலுவலகத்தில் சம்பளம் போடவில்லை.இதற்கான விளக்கத்தை பிடிஓ அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, பெண்கள் பணிக்கு திரும்பி சென்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,office women ,Panj. ,
× RELATED அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை...