×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி

திருவெறும்பூர், டிச.2: திமுக இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு 70 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கல்வெட்டையும் திறந்து வைத்தார். திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, பெல் தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர் தீபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசுகையில், 120 நாளில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நாளில் திருச்சியில் இன்று (நேற்று) தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது.

உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் முழுவதும் புதிய வாக்குறுதிகளை கொடுத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். டெல்டாவில் உள்ள 46 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஸ்டாலினை முதல்வராக அரியணையில் அமர்த்த வேண்டும் என்றார். முன்னதாக பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் கணேசபுரத்திலிருந்து தேவராய நேரி வரை டூவீலரில் பேரணியாக நேருவை தேவராய நேரிக்கு அழைத்து வந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி, நிர்வாகிகள் தனசேகர், அப்துல்குத்தூஸ், ரவீந்திரன், ஜெயலட்சுமி, குமார், மகளிரணி நிர்வாகிகள் கயல்விழி, மணிமேகலை, ஞானதீபம், சகாயமேரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : occasion ,birthday ,Udayanidhi Stalin ,
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...