துறையூரில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றம்

துறையூர், டிச.2: துறையூர் ஆலமரத்து சாலையில் காய்கறி மார்க்கெட் இயங்கி வரும் சாலை வழியாக பெரம்பலூரில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல வேண்டும். இச்சாலையில் கடைகள், தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் புகார் அளித்தனர். நேற்று போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் துறையூர் இன்ஸ்ெபக்டர் விதுன்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Stories:

>